Wednesday, October 28, 2009

அறிவியலின் தற்செயல் தோல்வி??


மனிதன் சிந்திக்கும் விலங்கு என்பார்கள். இயற்கையின் அத்தனை மர்மங்களுக்கும் காரணம் கண்டறிவதற்காய் அறிவியல் மனிதன் அயராது தேடுகிறான். சாமானியனுக்கு புரியாத எத்தனையோ விடயங்களுக்கு அறிவியலும் ஆன்மீகமும் விளக்கம் தந்திருக்கின்றன.இருந்தும் மனிதனால் இன்னும் காரணம் கண்டு கொள்ளப்பட முடியாத பல விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகையவற்றிற்குக்;கூட கடவுள் மேல் பாரத்தை போட்டு தப்பித்துக்கொள்வார்கள் ஆன்மீகவாதிகள். ஆனால் அறிவியல் மனிதனோ காரணத்தை கண்டறியும் வரை தன் தேடலைத்தொடர்ந்து கொண்டே இருக்கின்றான். இந்த தேடலின் போது அறிவியலும் ஆன்மிகமும் முட்டிக்கொள்ளும் தருணங்கள் மிக சுவாரஷ்யமானவை. அறிவியலால் விளக்கப்படாத விடயங்களுக்கு கடவுளின் பராக்கிரமத்தனங்கள் தான் காரணம் என்றும் இதனை அறிவியலால் ஒரு போதும் விளக்க முடியாதென்றும் ஆன்மீகவாதிகள் மார்தட்டிக்கொள்வர்.பின்னர் அதற்குரிய காரணத்தை அறிவியல் விளக்கும்போது அதை ஏற்க மறுப்பதும் அல்லது அறிவிற்குப்பொருந்தாத விளக்கங்கள் சொல்வதும் காலப்போக்கில் அதை மௌனமாக ஏற்றுக்கொள்வதும் ஆன்மீகவாதிகளுக்கு பொழுது போக்காகிவிட்டது. இவ்வாறே விஞ்ஞாணிகளும் அவ்வப்போது சாமானியப் பொதுமகனோடு விளையாடாமலில்லை. பூமியோடு வேற்றுக்கிரகம் ஒன்று மோதப்போவதாகவோ மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியில் விழப்போவதாகவோ கூறி இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் உலகம் அழியப்போவதாக எச்சரித்து மனிதனைப் பயமுறுத்துவதும் பின்னர் குறித்த நாள் நெருங்குவற்குள் அந்த வேற்றுக்கிரகமோ விண்கல்லோ திசை மாறிவிட்டதாக எல்லோhர் காதிலும் பூ சுத்துவதும் நவீன அறிவியல் ஜோஷியர்களான விஞ்ஞாணிகளுக்கு தாங்கள் இருக்கின்றோம் என்பதை பறை சாற்றுகின்ற உத்தியாக இருக்கின்றது.
இப்படியாக அறிவியலையும் ஆன்மீகத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விடயங்களில் ஆன்மீகவாதிகள் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு அறிவியலிடம் விளக்கம் கேட்டு மார்தட்டிக்கொள்ளும் நிகழ்வுகளில் ஒன்றுதான் தற்செயல் நிகழ்வுகள்.(ஊழiளெனைநவெள). எதிர்பாராத வகையிலும் அசாத்தியமான முறையிலும் நிகழும் இந்த தற்செயல் நிகழ்வுகள் அறிவியலுக்கு ஒரு பலத்த சவாலேதான். இத்தகைய நிகழ்வுகளுக்கிடையிலான தொடர்புகளைக்கண்டறிவதில் அறிவியலும் உளவியலும் இன்றளவில் வெற்றி பெறவில்லை. இந்த இடத்தில்தான் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுளின் ஏற்பாடுகள் என்ற கொள்கையும் ஆத்தீகமும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.
தற்செயல் நிகழ்வுகளுக்கு எத்தனையோ உதாரணங்களையும் சான்றுகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அதிசயிக்கத்தக்க தற்செயல் நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.அதிலும் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு ஜனாதிபதிகளுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கின்ற போது உலகின் கண்கள் சற்று அகலமாகவே விரிந்துவிடுகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆபிரஹாம் லிங்கன் மற்றும் ஜோன் கென்னடி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் இருவருடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப்பார்க்கின்ற போது தற்செயல் நிகழ்வுகளுக்குள்ள தொடர்புகள் எம் சிந்தனைகளுக்கு குளுக்கோசு பாய்ச்சுகின்றன.
1. லிங்கன் 1860 இலும் கென்னடி 1960 இலும் ஜனாதிபதியானார்கள்.சரியாக நூறு வருடம்.2. இருவரும் நீக்ரோ இனத்தவரின் உரிமைகளில் மிக தீவிரமாக ஆழ்ந்திருந்தார்கள்.3. இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.4. இரு மனைவியரும் வெள்ளை மாளிகையில் வாழும்போது பிள்ளை பெற்று. பிறந்ததும் குழந்தை இறந்தது. 5. லிங்கன் கென்னடி இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு துளைத்து செத்தார்கள்.6. லிங்கன் இறந்தது போர்ட் அரங்கில்.கென்னடி செத்தது லிங்கன் என்ற பெயர் கொண்ட காரில். ஆந்தக்காரைத்தயாரித்தது போர்ட் மோட்டார் கம்பனி.7 இருவரும் இறந்த பின்னர் ஜோன்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே பதவியேற்றார்கள். 'அன்ட்ரு ஜோன்சன்' இ 'லின்டன் ஜோன்சன்'.8. 'அன்ட்ரு ஜோன்சன்' பிறந்தது 1808 இல். 'லின்டன் ஜோன்சன்' பிறந்தது 1908 இல்.
9. ஆபிரஹாம் லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜோன். அதே சமயம் ஜோன் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.10. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் ஜோன் வில்க்ஸ் பூத் 1839.லீ ஹார்வி ஆஸ்வார்ட் 1939. சரியாக நூரு வருடங்கள்11. கொன்ற இருவரும் தென்மானிலத்தீவிரவாதிகள்.12. இருவரும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.13. பூத் லிங்கனை ஒரு அரங்கத்தில் கொன்றுவிட்டு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்ட் கென்னடியை கிடங்கிலிருந்து கொன்றுவிட்டு ஒரு அரங்கத்துக்கு ஓடினான்.14. லிங்கன் கென்னடி இரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில் 7 எழுத்துக்கள்.15. அடுத்த ஜனாதிபதிகளான 'அன்ட்ரு ஜோன்சன்' 'லின்டோ ஜோன்சன்' இருவர் பெயரும் 13 எழுத்துக்கள்16. இரு ஜனாதிபதிகளையும் கொன்றவர்களான 'ஜோன் வில்க்ஸ் பூத' 'லீ ஹார்வி ஆஸ்வார்ட்' இருவர் பெயரும் ஆங்கிலத்தில் 15 எழுத்துக்கள்.இறுதியாக லிங்கன் முதல் முறை ஜனாதிபதி பதவிக்கு மனு போடும் போது ஜோன் கென்னடி என்பவரை உப ஜனாதிபதியாக பரிந்துரைத்தார்.
இவ்விரு ஜனாதிபதிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் இந்த தற்செயல் நிகழ்வுகளை என்னவென்று சொல்வது? இத்தனை நிகழ்வுகளுக்குமான தொடர்புகள் எதை சொல்ல விளைகின்றன? முன்றாம் சக்தியொன்று வெளியேயிருந்து இவற்றையெல்லாம் நடாத்திக்கொண்டிருக்கின்றதா? அறிவியலும் ஆன்மீகமும் பதில் சொல்லட்டும்.இத்தகைய நிகழ்வுகளுக்கு சரியான விளக்கத்தை அறிவியல் தரும் வரையில் ஆத்திகர்களே கூத்தாடுங்கள்.

2 comments:

  1. Wiiliam Oscar Johnson எழுதிய THE ZERO FACTOR என்ற நூலில் இவ்வாறான நிகழ்வுகளுக்கும் பூச்சியத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதே. அப்படியானால் நியூமராலோஜி...???

    ReplyDelete
  2. தற்பொழுது Maya calendar என்றொரு இது சார்ந்த விடயம் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. 2012இன் பின்னர் உலகம் அழிந்துவிடப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். 2012இன் பின்னர் புவியின் காந்தப்புலம் எதிர்த்திசையில் மாறலாம், இவ்வாறு மாற நேரிட்டால் பூமி பஞ்சுபஞ்சாகப் பறந்துவிடும் என்பதாக விஞ்ஞானிகள் ஐயம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அழிவை அடிப்படையாகக் கொண்ட காட்சிகளுடன் ஹாலிவூட் படம் ஒன்றும் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகம், அறிவியல் எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது.

    ReplyDelete